Welcome to Our Website!

Posted on November 16th, 2009

எல்லாம் வல்ல வல்லநாட்டு குமாரசுவாமி நாடானின் திருவருளால் எம் குலதெய்வம் தென்கரைமால் அய்யனை வேண்டி உங்களை எமது இந்த இணைய தளத்துக்கு வரவேற்கிறோம்.

இந்த இணையம் வள்ளிக்குட்டி நாடார்கள் பற்றி வெகுவாக ஆராயும் நோக்குடன் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  இதில் வள்ளிக்குட்டி நாடார்களின் தெய்வங்கள், வழிபாடுகள், அவர்கள் ஆண்ட ஐந்து பத்து நாடு, பண்பாட்டு பழக்கவழக்கங்கள், ஆகியவை பற்றி ஆராய்கிறது.

வள்ளிக்குட்டி நாடார்கள் பெரிதும் போற்றி வணங்கி மகிழ்வது, திருச்செந்தூர் முருகன் வள்ளிக்குட்டி நாடார் குலத்தில் குமாரசுவாமியாக அவதரித்து. அவர்களை ஆட்கொண்டு, கோவில் கொண்டு அருள்பாலிக்கும் குமாரசுவாமியின் அவதார மகிமையை மட்டுமே. நாடானின் அவதார மகிமைகளை விளக்கும் நாடான் கதை வில்லுப்பாட்டு புத்தகமாகவும், வில்லிசையாகவும் இந்த இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தி நாடானின் அருள்பெற வேண்டுகிறோம்.

இந்த இணையதளத்தின் பிரதான நோக்கமே எமது சந்ததியினர் குமாரசுவாமி நாடானின் அவதார மகிமையை அரிந்து கொள்வதர்கும், புரிந்து கொள்வதர்கும், அவரை தொழுது இன்புறுவதற்குமே.

மேலும் எமது மூதாதையர் பற்றி யாமும், எமது வருங்கால சந்ததியினரும் நன்கு அறிந்து அவர்கள் காட்டிய நல்ல வழியில் வாழ்ந்து நாடானின் பேரருளில் திளைப்பதற்கே.

அருள்மிகு குமாரசுவாமியின் மகிமைகளை உலகம் அரியும் பொருட்டு www.kumaraswamytemples.com என்று ஒரு இணையதளம் ஆரம்பித்துள்ளோம். இது முழுக்க முழுக்க நாடானின் புகழ் பாடும்படி அமையபட்டுள்ளது. அத்தோடு திருச்செந்தூர் முருகனின் புகழ்பாட   www.tiruchendurtemple.com  என்று ஒரு இணையதளம் ஒன்று ஆரம்பித்து அதர்க்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.

இந்த இணையதளம் ஒரு ஆரம்பகட்ட முயற்சியே. இம் முயற்சியை நாடானின் திருப்பாதங்களில் சமர்பித்து அவன் அருள் வேண்டுகிறோம்...